O/L வரலாறு வினா-விடை 2022 (2023)
சா/த 2022(2023) — 33-T-I வரலாறு (தமிழ் மொழிமூலம்) — 40 பல்தேர்வு வினாக்கள். ஒவ்வொரு வினாவிற்கும் விடையைத் தெரிவுசெய்து உடனே சரிபாருங்கள்.
1. இலங்கையின் வரலாறு தொடர்ச்சியாக எழுதப்பட்ட நூல் எது?
2. ஆக்கிரமிப்பாளராக இருந்தபோதும் நேர்மை, நீதி மிக்க ஆட்சியைக் கொண்டிருந்தவராக மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் ஆட்சியாளன் யார்?
3. கைவிடப்பட்ட குளங்களை அண்டிய கிராமம் எப்பெயரால் இனங்காணப்பட்டது?
4. கிராமத் தலைவன் ஆகுவதற்குத் தேவையெனக் கருதப்பட்ட முக்கிய தகைமை எது?
5. நாட்டை நிர்வாக அலகுகளாகப் பிரித்து மந்திரிமாரை நியமித்த முதல் ஆட்சியாளன் யார்?
6. முதலாம் விஜயபாகு பொருளாதாரத்தைப் பலப்படுத்த பின்பற்றிய நடவடிக்கை எது?
7. பொருளாதார சேவை காரணமாக தெய்வநிலை பெற்ற மன்னன் யார்?
8. நிரல் I உடன் நிரல் II ஐப் பொருத்துக: பண்டுகாபய, பாதிகாபய, துட்டகைமுனு — (A) நாட்டை ஐக்கியப்படுத்தல் (B) கிராம எல்லை தீர்மானம் (D) தூதுவர்களை உரோமுக்கு அனுப்புதல்
9. புராதன காலத்தில் இலங்கை சர்வதேச வியாபாரத்தில் முக்கியத்துவம் பெறக் காரணம் என்ன?
10. குளக்கட்டு இடிந்து விழாமலிருக்கப் பின்பற்றப்பட்ட செயன்முறை எது?
11. A — பூங்கா அமைப்பு பற்றிய அறிவு; B — நீர் அகழியும் மதிலும்; C — சத்திர சிகிச்சை உபகரணங்கள்; D — நூலக அமைப்பு. சீகிரியா தொடர்பானவை எவை?
12. A — பூங்கா அமைப்பு; B — நீர் அகழி; C — நகர அமைப்பு; D — சுகாதார அறிவு; E — சத்திர சிகிச்சை உபகரணம். ஆலாஹன பிரிவெனா தொடர்பானவை எவை?
13. குடிநீரின் தரத்தையும் குளிர்ச்சியையும் பேணப் பயன்படுத்தப்பட்ட புராதன நிர்மாணிப்பு எது?
14. சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள கல்வெட்டு எது?
15. மக்கள் கஞ்சி உணவைத் தமது உணவில் சேர்த்துக்கொண்ட முக்கிய காரணம் என்ன?
16. கலிங்க மாகன், சந்திரபானு ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை விடுவித்தவர் யார்?
17. நிரல் I உடன் நிரல் II ஐப் பொருத்துக: அனுராதபுரம், கண்டி, கோட்டை — (A) மாயாரட்டை (B) இராசரட்டை (D) மலயரட்டை
18. கண்டியை சுதந்திர இராச்சியமாகக் கட்டியெழுப்பியவர் யார்?
19. A — தேசிய அரசுகள் தோற்றம்; B — வர்த்தக விருத்தி. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
20. தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
21. கைத்தொழில் புரட்சியின்போது சாயம், மருந்துகள், எண்ணெய், பசளை ஆகிய உப உற்பத்திகளின் காரணமாக விருத்தியடைந்த கைத்தொழில் எது?
22. கைத்தொழில் புரட்சியின்போது பயிர்ச் செய்கையில் நிலமாற்று முறை அறிமுகம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுகூலம் எது?
23. ஆங்கிலேயரால் இந்தியாவில் தாபிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் எவை? A — மதராஸ்; B — பம்பாய்; C — கோவா
24. கண்டி இராசதானி உத்தியோகபூர்வமாகப் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டது எப்போது?
25. திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் ஆங்கிலேயர் கவனம் செலுத்தியதன் காரணம் என்ன?
26. ஆங்கிலேயர் கண்டியை இலகுவாகக் கைப்பற்றக் காரணமான காரணி எது?
27. கொழும்பு சாஹிரா கல்லூரியைத் தாபித்தவர் யார்?
28. சேர்ச் மிஷனரி சங்கத்தினால் வெளியிடப்பட்டது எது?
29. ஐரோப்பிய வணிகர்களின் போராட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
30. டொனமூர் சீர்திருத்தத்தால் வாக்குரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
31. இலங்கை தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
32. அரசுக் கழகத்தில் இலங்கையருக்கு உரித்தல்லாத துறை எது?
33. தேயிலைப் பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமற்ற பிரதேசம் எது?
34. சிங்கோனா பயிர்ச்செய்கை தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன?
35. A — நீதிச்சேவை ஆணைக்குழு அமைத்தல்; B — அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்தல்; C — பிரித்தானியத் தொடர்பு முடிவுக்கு வந்தமை; D — பிரதமர் நாட்டின் தலைவரானமை. 1972 யாப்பு தொடர்பானவை எவை?
36. A — நீதிச்சேவை ஆணைக்குழு அமைத்தல்; B — நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி; C — பிரதமர் நாட்டின் தலைவர்; D — மேலவை உருவாக்கம். 1978 யாப்பு தொடர்பானவை எவை?
37. பிரான்சியப் புரட்சி தொடர்பான கூற்றுகள்: A — பொஸ்ரன் தேநீர் விருந்து பிரான்சியப் புரட்சியின் நிகழ்வாகும்; B — பஸ்ரீலைத் தாக்குதல் பிரான்சியப் புரட்சியின் நிகழ்வாகும்.
38. முதலாம் நிரலுக்கும் இரண்டாம் நிரலுக்கும் இடையிலான தொடர்பைக் காட்டாத சோடி எது?
39. பொருத்தமற்ற சோடி எது? (தலைவர்கள் — நிகழ்வுகள்)
40. பொருத்தமற்ற சோடி எது? (சீர்திருத்தங்கள் — ஆண்டுகள்)
குறிப்பு: இவ்வினாக்கள் க.பொ.த (சா/த) 2022(2023) வரலாறு வினாத்தாள் அடிப்படையில் கல்விப் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகின்றன. ⏳ குறியுள்ள வினாக்கள் எங்கள் ஆசிரியர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
