கவிஞர்கள் களம்

கவிஞர்கள் களம்

உள்ளூர் கவிஞர்களின் படைப்புகள். உங்கள் கவிதையை இங்கே வெளியிடுங்கள்.

இது போதும் என்று நினைக்கிறேன்...

07 ஆடி 2026 என் கவிதைக் காடுகள் ஒரு பாலைவனமாக மாறிக் கொண்டே இருந்தன.. அங்கே மனிதர்கள் வசிக்காத மணல் திட்டுகள் தான் நிறைந்து இருக்கின்றன. பறவைகள் சஞ்சரிக்காத ஒரு பேரமைதியில் மரங்கலெல்லாம் மரணித்துக் கொண்டே இருக்கின்றன. சோபையிழந்த அந்தச் சூழல் என்னை ஒரு சூழ்நிலைக் கைதிபோல் விலங்கிட நினைக்கிறது. அந்த மயான பூமியில் மனம் மட்டும் ஏனோ மண்டியிட்டுக் கிடக்கின்றது.... ஏன் தெரியுமா? அது என் அப்பு ஆச்சி வாழ்ந்த ஆதிநிலம். ஒரு காலத்தில் என் பிஞ்சுச் சுவடுகள் பதித்த பூர்வீக நிலம். இன்று பல நல்ல நினைவுகளை மட்டுமே சுமக்க வைத்து விட்டு தன் சுயம் இழந்து நிற்கின்றது. அங்கே! கடலடிக்கும் சத்தம் காதுவரைக் கேட்கும். நெய்தல் நிலத்தோடு முல்லை நிலமும் முட்டி நின்று அழகு சேர்க்கும். முன்பனி காலத்தில்... திருப்பள்ளி எழுச்சி எங்கள் நித்திரையை தட்டிப் பறிக்கும். அப்போதெல்லாம் மார்கழி விடுமுறை நீண்டு இருக்கும். நாங்கள் ஐந்து மணிக்கு அரக்கப் பரக்க எழுந்து விடுவோம். வேப்பங் காற்றும் விடியலின் சூரிய கதிர்களும் எங்கள் மேனியை தொட்டுத் தொட்டுப் பார்க்கும். இளநீர்ச் சுவைபோல் எங்கள் வயற்கிணற்று நீர் இனிப்பாய்ச்சுவைக்கும். வயிற்றுப் பசி போக்க வழிநெடுக காட்டுப் பழங்கள் கனக்கா இருக்கும். நிலவு பார்த்து நெய்தல் நிலம் சென்று ... மட்டியும் நண்டுக் குஞ்சும் நல்லாவே கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் அந்த நெய்தல் நிலமும் மருத நிலமும் மறைந்து கொண்டே போனது! பறவைகள் இரத்தக் காடுகளை விட்டு தூரப் பறந்து போயின. இது ஒரு வகை துரத்தி அடிக்கப்பட்ட நிகழ்வாகக் கூட இருக்கலாம். நெல் மணிகளை நிறைத்த மருத நிலத்தில் கால்களை காயப் படுத்தும் எழும்புகள் தான் துருத்திக் கொண்டு இருக்கின்றன.. அதனால் தான் என்னவோ மனிதர்களும் அங்கே இருந்து மறைந்து போனார்கள். அந்த நிலத்தில் சில மரங்கள் மட்டும் பட்டையின் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டே காத்திருக்கிறன... இந்த வானம் ஒரு சில மழைத் துளிகளை தெளித்து விடாதா? திரும்பவும் இந்தக் காடுகள் சடைத்து விடாதா? மீண்டும் ஒரு பறவைக் கூட்டமும்... மனிதர்களின் காலடித் தடங்களும் நிறைந்து விடாதா... மருதமும் நெய்தலும் முட்டி கதை பேசாதா? முன்சென்ற காலம் பின்னே மலராதா? நம்பிக்கை தானே வாழ்க்கை! நம்புவோம் மறுபடியும் இந்த நிலம் பாலைவனமாக மாறாமல் மருத நிலமாக மாறும்... மாறவேண்டும்!! அதுவரை... அதுவரை... எழுதிக் கொண்டே இருக்கும் போது என் பேனாவின் மைத் துளிகள் கசிந்து விடுகின்றது.... இது போதும் என்று நினைக்கிறேன் இப்போது இது போதும் என்று நினைக்கிறேன்.. எழுத்து --வன்னியூர் ஆர்.ஜெ கலா

— Arivuppasi Admin

விமாணப் பயணம்

வானத்து கழுகே, தேசங்களை இணைக்கும் வெள்ளிச் சிறகே, கடமை தவறா காவல் தெய்வமே! உன் நெற்றியில் ஒரு கீறல் விழுந்தால், என் நெஞ்சம் பதறி துடிக்குதடி. உன்னை வடித்த விஞ்ஞானிக்கு வந்தனம், உன்னை இயக்கும் விமானிக்கு வணக்கம். உன்னை மறப்பதென்பது இயலாத காரியம், நினைப்பதற்கே நெஞ்சில் தைரியம் வேண்டும். நீ காட்டும் உலகம் புதிது, நீ தரும் அனுபவம் இனிது. தினம் தினம் என் கனவில் சிறகடிக்கும் என் அன்பு விமானமே, வாழ்க நீ பல்லாண்டு

— Arivuppasi Admin

விடியல் நோக்கி

29. ஆனி. 2026 வில்மெர்கன் தொங்கும் பிரபஞ்சத்தில் தொலைந்து நிற்கிறோம் நாம். பார்வை மங்கி பாதை மறந்தோம். நீ மட்டும் - தெவிட்டா இசையாய் தினம் வலம் வருகிறாய். நாமோ - தேயும் நிலவாய் தேய்ந்து போகிறோம். ஆனாலும்... தொலைந்த கனவுகளைத் தேடி எடுப்போம். உன்னோடு சேர்ந்து நனவாய் மலர்வோம். செக்கச் சிவந்த சூரியனே, எழுந்து வா. எங்கள் வாழ்வில் ஒளி ஏற்று.

— Arivuppasi Admin
Arivuppasi Media logo
அறிவுப்பசி
ஊடகம்
அறிவு மக்களை சந்திக்கும் இடம்

அறிவு ஒரு உரிமை, சலுகை அல்ல.

அறிவு மக்களை சந்திக்கும் இடம்

காலை சுருக்கம்

தினமும் காலை அறிவியல் சுருக்கம் உங்கள் இன்பாக்ஸில்.

வாட்ஸ்அப்பில் பெறுக

புதிய கட்டுரைகளை நேரடியாக வாட்ஸ்அப்பில் பெறுங்கள்.

வாரம் ஒரு கட்டுரை பெறுங்கள்

ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவு உங்கள் இன்பாக்ஸ் வரை.

© 2026 Arivuppasi Media. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

அனைத்து அசல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஒலி, ஆராய்ச்சி மற்றும் கல்வி உள்ளடக்கங்கள் பதிப்புரிமையால் பாதுகாக்கப்படுகின்றன. எழுத்துப்பூர்வ அனுமதியின்றி அங்கீகரிக்கப்படாத மறுஉருவாக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

அறிவுப்பசி
அறிவுப்பசி செயலியை நிறுவுங்கள்
ஆஃப்லைனிலும் படிக்கலாம் · வேகமான அணுகல்

🍪 நாங்கள் cookies பயன்படுத்துகிறோம். மேலும் அறிய தனியுரிமைக் கொள்கை பார்க்கவும்.